மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு

721

மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அதிபராக பொறுப்பேற்க உள்ள இப்ராஹிம் முகமது சோலீ, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் முகமது யாமீன் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து, எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் சார்பில் இப்ராஹிம் முகமது சோலீ போட்டியிட்டார்.

தேர்தல் முடிவில் 58.3 சதவீத வாக்குகளைப் பெற்று முகமது சோலீ வெற்றி பெற்றார்.

இதையடுத்து, 7வது அதிபராக முகமது சோலீ வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு, அதிபராக பதவி ஏற்க உள்ள இப்ராஹிம் முகமது சோலீ அழைப்பு விடுத்துள்ளார்.

மாலத்தீவில் இயல்பான சூழல் நிலவினால் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement