ICC T20 தரவரிசை: முதல் 10 இடங்களில் இந்திய வீரர்கள்

349

டி20 போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்திய அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஷாம், இரண்டாவது இடத்தில் நியூசிலாந்தின் காலின் மன்ரோ, மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், நான்காவது இடத்தில் பின்ச் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 17வது இடத்திலும், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 11 வது இடத்திலும் இருக்கின்றனர். பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலில், ரஷீத் கான் 780 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். இந்தியாவைப் பொறுத்தவரையில், குல்தீப் யாதவ் ஐந்தாவது இடத்திலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 16வது இடத்திலும் இருக்கின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of