“இனிமே அந்த தவறு நடக்காது..” ஐசிசி கொண்டு வந்த புதிய விதிமுறை..! கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்..!

732

2019- ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டை-யில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

ஆனால், சூப்பர் ஓவரும் டை-யில் முடிந்தது. இதையடுத்து, அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற கணக்கில், இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் போட்டியாளர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், ஐசிசி சில விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது. அந்த விதிமுறைகள் பின்வருமாறு:-

1. இனிமேல் சூப்பர் ஓவர் டை-யில் முடிந்தால், சரியான முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் முறையில் போட்டி நடத்தப்படும். அதாவது, யார் வெற்றியாளர்..? யார் தோல்வியாளர் என்பது தெரியும் வரை தொடர்ந்து சூப்பர் ஓவர் வீசப்படும்.

2. சூப்பர் ஓவர் மழை போன்ற காரணத்தினால் நீண்ட நேரமாக நடைபெறவில்லை என்றால் போட்டி கைவிடப்படும்.

3. பீல்டர்கள் கட்டுப்பாடு போட்டியின் கடைசி ஓவரில் எப்படி இருந்ததோ, அதே போன்று தான் சூப்பர் ஓவரிலும் இருக்கும்.

4. சூப்பர் ஓவருக்கான இடைவேளை ஐந்து நிமிடங்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of