இந்திய அணிமீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – பாக் அமைச்சர்

513
pakmisntr10.3.19

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பலரும் பல்வேறு நிகழ்வுகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியும் தங்களது பங்களிப்பை தெரிவிக்கும் விதத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது கருப்புப் பட்டை அணிந்து அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே, இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்தனர்.

இந்நிலையில், ராணுவ தொப்பி அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குரேஷி கூறுகையில், தன்னுடைய சொந்த தொப்பிக்கு பதிலாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய அணி விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா?. ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of