ஐசிசி ஒருநாள் தரவரிசை: இந்தியா 2 வது இடம்…, கோலி, பும்ரா தொடர் முதலிடம்

558

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றியை கைப்பற்றினர், இதனைத்தொடர்ந்து நடைப்பெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் 4-1 என்ற கணக்கில் வெற்றியை தன்வசமாக்கிக்கொண்டனர் இதன் மூலம் 122 புள்ளகள் பெற்று 2 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தொல்வியை சந்தித்தும் இங்கிலாந்து அணி  தொடர்ந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென்ாஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தலா 111 புள்ளிகளுடன் 3 மற்றும் 4 வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 100 புள்ளிகளுடன் 6 வது இடத்தில் உள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோகித் சர்மா 854 புள்ளிகளுடன் 2 வது இடத்திலுள்ளார்.

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் பும்ரா 808 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 4 வது இடத்திற்கு பின்தங்கினார்.