கிரிக்கெட் தரவரிசை.. முதல் 2 இடங்களை கைப்பற்றிய இந்திய வீரர்கள்..

213

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 871 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தை தக்க வைத்துள்ளார்.

இதேபோன்று இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 855 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 3வது இடத்திலும், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் 4வது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் டு பிளிஸ்சிஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். இந்த தகவலை அறிந்த இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.