ஐசிசி-யின் வருடாந்திர தரவரிசை வெளியீடு.., அதிர்ச்சியில் இந்தியா?

766

சர்வதேச அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற அணியை கணக்கிட்டு ஐசிசி-யால் ஆண்டு தோரும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை முதல் இடத்தில் இருக்கும் அணி சிறந்த அணியாக கருதப்படும். இந்த தரவரிசையில் முன்னதாக உள்ள இரண்டு வருடங்கள் கணக்கிடப்படும்.

இதையெல்லாம் கணக்கிட்டு இந்த வருடத்திற்கான அப்டேட் செய்யப்பட்ட தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி 2015-16 ஆம் ஆண்டு நீக்கப்பட்டு, 2016-17 மற்றும் 2017-18-ம் ஆண்டுகளுக்கான 50 சதவீதம் மதிப்பீடு சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா 116 புள்ளியில் இருந்து மூன்று புள்ளிகளை இழந்து 113 புள்ளிகள் பெற்றுள்ளது. நியூசிலாந்து 108 புள்ளியில் இருந்து மூன்று புள்ளிகள் அதிகம் பெற்று 111 புள்ளிகள் பெற்றுள்ளது. இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இந்தியா முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. 3-வது இடத்தில் இருந்த நியூசிலாந்தை 4-வது இடத்திற்கு தள்ளி தென்ஆப்பிக்கா முன்னேறியது.

இன்னும் சில மாதங்களில் ஒரு நாள் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் ஐசிசியின் இந்த தரவரிசை பட்டியல் இங்கிலாந்துக்கு மிகுந்த பலத்தை அளித்துள்ளது. பல கிரிக்கெட் விமர்சகர்கள் உலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்பு உள்ளது என தெரிவித்த நிலையில், ஐசிசியின் இந்த தரவரிசை மேலும் அவர்களுக்கு பலம் சேர்த்துள்ளது.

மேலும் உலகக்கோப்பையை இங்கிலாந்து தன்னுடைய சொந்தமண்ணில் சந்திக்க உள்ளதால், அவர்களுக்கு மைதானத்தின் பலமூம், பலவீணமூம் நன்கு தெரிந்திருக்கும். எனவே அதனை உணர்ந்து அவர்களும் விளையாடுவார்கள் என்பதால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

இவர்களுக்கு இணையாக இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of