“நான் தான் சொல்லிட்டேன்ல..” ICC போட்ட ஒரே ஒரு டுவீட்..! பொங்கியெழுந்த சச்சின் ரசிகர்கள்..!

884

உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தெரிந்த முகம் என்றால் அது சச்சின் டென்டுல்கர் தான். இவர் தனது வெறித்தனமான ஆட்டத்தாலும், தனது நேர்மையான குணத்தாலும் பலராலும் மதிக்கப்படுபவர்.

கிரிக்கெட் கடவுள் என்று அனைவராலும் அழைக்கப்படும் சச்சின் குறித்து ஐசிசி சமீபத்தில் ஒரு டுவீட் வெளியிட்டிருந்தது. அதில் சச்சினும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்சும் இருக்கும் புகைப்படம் இருந்தது.

அதற்கு கீழே, எப்போதும் சிறந்த ஆட்டக்காரர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் என்று நக்கலாக பதிவிட்பப்ட்டிருந்தது. இதற்கு சச்சின் டென்டுல்கரின் ரசிகர்கள் பெரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பென் ஸ்டோக் சிறப்பாக விளையாடி தனது அனியை வெற்றியடைய செய்தார். அவருக்கும் பாராட்டு தெரிவிப்பதை போல், சைலன்டாக சச்சினை மீண்டும் ஐசிசி அசிங்கப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வெளியிட்ட புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டு நான் அப்பவே சொன்னேன்ல என்று டுவீட் செய்துள்ளது. இதற்கு சச்சின் ரசிர்கள் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of