மெகுல் சோக்சியிடம் பணம் பெற்றார் ஜெட்லி மகள் – ராகுல் காந்தி

606

வங்கி மோசடி குற்றவாளி மெகுல் சோக்சியிடம் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மகள் பணம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

திருடன் மெகுல் சோக்சியிடம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் அருண் ஜெட்லியின் மகளும் இருந்துள்ளதாகவும், I.C.I.C.I. வங்கி கணக்கில் இருந்து அவரது பெயருக்கு பணம் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே மெகுல் சோக்சியை அருண் ஜெட்லி தப்பிக்கவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், தவறு செய்த அமைச்சர் அருண் ஜெட்லி உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.