ஜாதிக்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்தால் தமிழகத்திற்கு மாற்றம் ஏற்படும் – ராமதாஸ்

865

ஜாதிக்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்தால் தமிழகத்திற்கு மாற்றம் ஏற்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது மாற்றம் என்றும் அந்த மாற்றத்தை பாட்டாளி மக்கள் கட்சி அமைத்து கொடுக்கும் என்றார்.

ஜாதிக்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினருடன் சேர்ந்து அவர்களுக்குண்டான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என ராமதாஸ் தெரிவித்தார்.

 

Advertisement