பெரிய பட்ஜெட் என்று கூறி அதிக கட்டணம் வசூல் செய்தால் திரையரங்கு உரிமம் ரத்து

166
kadambur-raju

கோவில்பட்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் எந்த எமர்ஜென்சியும் இல்லை என்றும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் எந்த தொற்று நோய்களும் தமிழகத்தில் பரவலாக காணப்படவில்லை என தெரிவித்தார். இது போன்ற நேரங்களில் மக்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய மு.க.ஸ்டாலுக்கு மக்களை அச்சறுத்தி, அரசியல் நடத்துவது வாடிக்கையாகி விட்டது என அவர் குற்றம் சாட்டினார்.

பண்டிகை காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுக்க பல்வேறு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் யார் திரைப்படமாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here