மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கான்கிரீட் வீடு -பெரம்பலுாரில் ராஜ்நாத் சிங் பேச்சு

680

மீண்டும், பா.ஜ., ஆட்சி அமைந்ததும் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, குடிசையில்லாத இந்தியாவாக மாறும் என, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

பெரம்பலுாரில், அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, நடந்த பிரசாரக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:

தமிழகத்தில், 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆட்சிகளை கலைத்தது, காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் – தி.மு.க., கூட்டணி, ஜனநாயக விரோத கூட்டணி.

‘காங்கிரஸ் கட்சியுடன் எந்த காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம்; கூடா நட்பு கேடாய் முடிந்தது’ என, மறைந்த கருணாநிதி பேசினார். அதையும் மீறி, தற்போது கூட்டணி சேர்ந்துள்ளனர்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில், 2008 -2014ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில், 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தரப்பட்டன. ஆனால், பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில், 1.30 கோடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன.

மீண்டும், பா.ஜ.க ஆட்சி அமைந்ததும், 2022ல், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு, குடிசையில்லாத இந்தியாவாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement