ஸ்டெர்லைட்டை திமுக ஆட்சியில் மூடி இருந்தால் மக்கள் துன்பப்பட்டிருக்கமாட்டார்கள் – எடப்பாடி பழனிச்சாமி

392

ஸ்டெர்லைட் ஆலையை திமுக ஆட்சியின் போது மூடி இருந்தால், பொதுமக்கள் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பேசிய பழனிசாமி, நாடு பாதுகாப்பாக இருக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று கூறினார்.

ஏழைகளுக்காக அதிமுக அரசு கொண்டுவரும் திட்டங்களை தடுக்கும் ஒரே கட்சி திமுக என முதலமைச்சர் பழனிசாமி குற்றம் சாட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு திமுக ஆட்சியில் தான் நிலம் ஒதுக்கீடு செய்ததாக குறிப்பிட்ட அவர், ஸ்டெர்லைட் ஆலையை திமுக ஆட்சியின் போதே மூடியிருந்தால், பொதுமக்கள் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.