“2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது..”- மாநில அரசின் அதிரடி அறிவிப்பு..!

341

இந்தியாவின் மக்கள் தொகையை குறைக்கும் நோக்கத்தில், வரும் 2021 ஆம் ஆண்டு முதல், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அரசு வேலை இல்லை என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது அசாம் மாநில அரசு.

இந்தியாவின் மக்கள் தொகை 1.37 பில்லியன் அளவை எட்டியுள்ள நிலையில், அதனைகுறைக்கும் நோக்கத்துடன், அசாம் மாநில அரசின்தற்போதைய முடிவை, இந்தியாவின் பல மாநிலங்களும் பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன.

ராஜஸ்தான் 1994ஆம் ஆண்டு முதலும்,மத்திய பிரதேசம் 2001 முதலும்,குஜராத்,மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்கள்2005 ஆம் ஆண்டு முதலும் இத்தகைய சட்டத்தை பிறப்பித்து அதனைபின்பற்றி வருகின்றன.

கடந்த 1994 ஆம் ஆண்டு, தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேச மாநிலங்களில், மே 30, 1994 ஆண்டிற்கு பின்னர் குழந்தை பெறும் பெற்றோர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவற்றிலிருந்து சற்று மாறுபட்டு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தாலும், அவர்களது வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற சட்டத்தை கடந்த 2003ஆம் ஆண்டு முதல் கர்நாடக மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of