மோடி வென்றால் என் மகன் அமைச்சர் ஆவார்? ஓ.பி.எஸ்!

549

தேனியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவர் கூறுகையில்,

“திறமையும் தகுதியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது போல எனது மகனும் அரசியலுக்கு வந்துள்ளார்.”

தேனி நாடாளுமன்ற வேட்பாளராக அதிமுக வேட்பாளர் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றால் மோடி அமைச்சரவையில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ”உங்களின் ஆசைப்படியே அது நடைபெறும். நான் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறேன். அனைத்து மக்களிடமும் அதிமுகவுக்கு அமோக வரவேற்பு உள்ளது”

இவ்வாறு அவர் கூறினார்.