“ஊரடங்கு உத்தரவை மதிக்காவிட்டால் FIR வீடு தேடி வரும்”

234

ஊரடங்கை மதிக்காவிட்டால் எப்.ஐ.ஆர் வீடு தேடி வரும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 2657 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 72 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கை மதிக்காவிட்டால் எப்.ஐ.ஆர் வீடு தேடி வரும் என்று உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முசாபர் நகர் மாவட்ட மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் யாதவ் கூறியுள்ளதாவது

கடந்த ஏழு எட்டு நாட்களாக ஊரடங்கைப் பின்பற்றுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். ஆனால் உங்களில் சிலர் அதனை மதிக்காமல் தொடர்ந்து வெளியில் சுற்றி வருகிறீர்கள். எனவே இன்மேல் விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு உங்கள் வீடு தேடி எப்.ஐ.ஆர் வரும்.

வெளியில் சுற்றுபவர்களை காவல்துறை புகைப்படம் எடுத்து அதன்மூலமாக் தொடர்புடையவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு எப்.ஐ.ஆர் அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of