அதை தடுக்காவிட்டால்…! – தமிழக காவல்துறையை எச்சரிக்கும் சுப்ரீம் கோர்ட்..!

421

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கவுரவக் கொலை அடுத்தடுத்து நடந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், கவுரவக் கொலையை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எந்த அளவு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது? என்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர்.

இதன்படி, தமிழக டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. சாம்சன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கவுரவக் கொலையை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

இதை படித்து பார்த்த நீதிபதிகள், அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் திருப்திகரமாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், ‘கவுரவக் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறினால், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படும்’ என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of