மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்!

321

பொது தேர்வு எழுதும் மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்று முதல் பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி உள்ளன.

இந்நிலையில் 10,11,12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின் போது காப்பி அடித்தால் அந்த அறையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காப்பி அடிக்கும் மாணவர்கள பறக்கும்படையினர் கண்டுபிடித்தால், சம்பந்தப்பட்ட தேர்வு அறையின் கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of