அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் – தேர்வுத்துறை

220

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதிலும் சிரரம் நீடித்துள்ளது.

மேலும், 10ம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் எழுத முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ளனர். இதனால் அனைத்து மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடையச் செய்வதில் ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், 10,11-ம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் என பதிவு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முகாம் அலுவலர்களுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.