அறிவுரைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

540

கொரோனா அறிவுரைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் செய்தி பதிவிட்டுள்ள அவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தனிமைப்படுத்திக்கொள்ள சில பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதில் சிலர், அரசின் அறிவுரைகளை பின்பற்றுவதில்லை என்று கவலை தெரிவித்துள்ள அவர்,  இதன் மூலம், கொரோனா சமூதாய தொற்றாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள பயணிகளின் பட்டியலை அனைத்து மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், பயணிகள் அனைவரையும் கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அறிவுரைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Advertisement