பாமக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் லட்டு வாங்கி தருவேன் – கஞ்சா கருப்பு

1135

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி பாமக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் லட்டு வாங்கி தருவதாக நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்தார்.

திண்டுக்கல் தொகுதி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து பழனி பேருந்து நிலையம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், வரும் 18ஆம் தேதி அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்தால் 25ஆம் தேதி அனைவருக்கும் பழனி கோவிலில் லட்டு வாங்கி தருவதாக தெரிவித்தார். மோடி மீண்டும் பிரதமரானதும் தாமிரபரணி தண்ணீரை பழனிக்கு கொண்டு வருவேன் என கூறினார். பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக முதலமைச்சர் மோடி என்று கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of