குடிநீர் வீணடித்தால் அபராதம்! நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு!

550

தமிழ்நாட்டைப் போலவே குஜராத் மாநிலத்திலும் வறட்சி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அங்குள்ள டகோத் நகரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. அணை நீர்மட்டம் குறைந்த நிலையிலும், தண்ணீர் வழங்கும் ஏரி வறண்ட நிலையும் காட்சியளிக்கின்றன.

இதனால், நகர மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாடு காரணமாக, தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக 9 வார்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் சோதனை நடத்தி, தண்ணீரை வீணடிப்பவர்களிடம் அபராதம் வசூலிப்பார்கள்.

மேலும், இரண்டாவது, மூன்றாவது தடவையாக தண்ணீரை வீணடித்து பிடிபட்டால், வீட்டு தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of