ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல்

266

:இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் பெட்ரோல் வழங்கப்படும் என பெட்ரோல் பங்க் நிறுவனம் அறிவித்து வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்தது.

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் சசி பொன்னேரி ஏ.எஸ்.பி., பவன்குமார் ரெட்டி ஆகியோர் தலைமையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

விழிப்புணர்வுசோழவரம் அடுத்த ஜனப்பச்சத்திரம் கூட்டுசாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கிற்கு வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுந்தரராஜன் முருகேசன் ராஜராஜேஸ்வரி மற்றும் காவல்துறையினர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்போர் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் எனவும் சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இலவச ஹெல்மெட்மேலும் ஹெல்மெட் அணியாமல் வருவோர் மற்றும் மது போதையில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வினியோகம் இல்லை.அதேபோன்று 18 வயதுக்கு கீழ் வரும் சிறார்களுக்கும் பெட்ரோல் வழங்கப்படாது என தனியார் பெட்ரோல் பங்க் நிறுவனம் அறிவித்து.

வாகன ஓட்டிகளிடம் பிரசாரம் செய்தது.ஹெல்மெட் அணியாமல், பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகளில் சிலருக்கு, இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.