தொழிலதிபர் வீட்டில் 89 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

476
I-G-Pon-Manickavel

சிலை கடத்தல் வழக்கில் தீனதயாளன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷா என்பவரிடம் சிலைகளை விற்றதாக விசாரணையில் அவர் கூறியிருந்தார்.

I-G-Pon-Manickavel I-G-Pon-Manickavel I-G-Pon-Manickavel

இது தொடர்பாக தீனதாயாளன் வீட்டில் ஏற்கனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் ரன்வீர் ஷா வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஐம்பொன் சிலைகள், 22 தூண்கள் 12 உலோகம் என மொத்தம் 89 சிலைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், 89 சிலைகளும் கோவில்களில் இருந்து திருடி விற்கப்பட்டவை என கூறினார்.