தொன்மையான சிலைகளுக்கு பதில் புதிய சிலைகள் மாற்றம்

1143

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில் மிகவும் பழமையான சிலைகள் உள்ளன.

இதில் பல சிலைகள் மாயமானதாக வந்த தகவலை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஏற்கனவே 2 முறை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ADSP ராஜாராமன் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் நம்பிராஜன் உள்பட 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தஞ்சை பெரிய கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

சோதனையின் போது, 44 தொன்மையான சிலைகள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் செய்தியாளர்களக்கு பேட்டியளித்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ADSP ராஜாராமன், சிலைகள் மாயமானதற்கு முகாந்திரம் இருப்பதால்தான், தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

முழுஆய்வுக்கு பிறகே உண்மை நிலை தெரியும் என்றும் கூறினார்.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2004-ம் ஆண்டு 3 சிலைகள் மாயமானது குறித்து கோயில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். இதில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement