கவனிக்க வேண்டியவர் எதுவும் செய்யாததால் நான் செய்கின்றேன்..,

214

உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்கு உட்பட்ட கோர்வா என்ற இடத்தில் அதிநவீன துப்பாக்கி தொழிற்சாலை துவக்கி வைக்கப்பட்டது. தொழிற்சாலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.இந்தோ ரஷ்யா துப்பாக்கி தயாரிப்பு நிறுவனம் சார்பிலான இந்த தொழிற்சாலையில் ஏகே 47 ரக துப்பாக்கியின் அதிநவீன வடிவமான ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக ஏழரை லட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு துணை ராணுவப்படையினருக்கு வழங்கப்பட உள்ளன​.

துப்பாக்கி தொழிற்சாலை துவக்க விழாவில் பேசிய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன். அமேதி தொகுதியை கவனிக்க வேண்டியவர் எதுவும் செய்யாத நிலையில், பிரதமர் மோடியின் ஓராண்டு முயற்சியில் இந்த தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.