ஐ.ஐ.டி., பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி இன்று சென்னை வருகை

244

 

சென்னை ஐ.ஐ.டி துவங்கப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவுப்பெறுவதையொட்டி 56வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9:00 மணிக்கு சென்னை வருகிறார்.

அங்கு இருந்து ஹெலிகாப்டரில் சென்னை ஐ.ஐ.டி, வளாகம் வருகிறார். காலை 11:00 மணிக்கு பட்டமளிப்பு விழாவில், மோடி பங்கேற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

 

பகல் 1:00 மணிக்கு, அவர், ஐ.ஐ.டி.,யில் இருந்து புறப்பட்டு, ஹெலிகாப்டரில், சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி செல்கிறார். விழாவில், பிரதமர் மோடியுடன், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மற்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of