ஐஐடி மாணவி தற்கொலை செய்த விவகாரம்..! தற்போது ஏற்பட்ட பகீர் திருப்பம்..! சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள்..!

1114

கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் பாத்திமா லத்தீப். இவர் சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று, பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துக்கொண்டார்.

தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பகீர் திருப்பம் எழுந்துள்ளது. அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு பிறகு வாங்கிய குடும்பத்தினர், ஈமச்சடங்கை முடித்து விட்டு, அப்பெண்ணின் செல்போனை ஆராய்ந்துள்ளனர்.

அதில், உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் மற்றும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை குறிப்பிட்டு, இவர்கள் தான் என் தற்கொலைக்கு காரணம் என்றும், அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும், மாணவி குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், மாணவியின் இந்த பதிவு, தற்கொலைக்கு முந்தைய நாள் அன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, மாணவியின் தந்தை, தனது மகளின் மரணம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என கோரியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of