இளையராஜா வழக்கு ஒத்திவைத்தது – சென்னை உயர்நீதிமன்றம்!

111

திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வரும் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜாவை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்ககோரி தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் இன்றைய விசாரணையின்போது, இளையராஜாவின் நிகழ்ச்சி தொடர்பாக செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை

பாராட்டு விழா எனக் கூறிவிட்டு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் இதனை மறுத்த விஷால் தரப்பு வழக்கறிஞர், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து தான் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக விளக்கம் அளித்தார்.

மேலும், நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.