“பாலு சீக்கிரமாக எழுந்து வா” – இளையராஜா உருக்கம்

518

பாலு சீக்கிரமாக எழுந்து வா உனக்காக காத்திருக்கிறேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோட முடிந்துபோவதும் அல்ல, சினிமாவோடு தொடங்கியதும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

எங்கேயோ மேடைக் கச்சேரிகளில் நாம் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இசை நிகழ்ச்சி, நம் வாழ்வாகவும் வாழ்வுக்கு ஆதாரமாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதேபோன்று நம் நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நீ நிச்சயம் மீண்டு வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. அது நிச்சயம் நடக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம், குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்காக, இசை ரசிகர்கள் அனைவரும் தன்னுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  தன் அருமையான குரலால் நமக்கு இன்பத்தை கொடுத்துள்ளார் என்றும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் இயக்குநர் பாரதிராஜா, நடிகர்கள் தனுஷ், விவேக், பிரசன்னா, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட பலரும் எஸ்.பி.பி குணமடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement