திரைக்கு வந்தார் இளைய தளபதி விஜயின் மகன்

571

தமிழ் சினிமாவில் தந்தையின் வழியில் பிள்ளைகள் திரைக்கு வருவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் விஜய் யும் சேர்கிறார். தமிழ் திரையுலகில் உச்சத்தில் உள்ள நடிகர் இளைய தளபதி விஜய். இவர் பாணியில் அவரது மகனும் மெல்ல திரையுலகில் வந்து கொண்டிருக்கிறார்.  2007 ல்  வெளிவந்த போக்கிரி படத்தின் பாடலில் ஒரு காட்சிக்கு விஜயின் மகன் சஞ்சய் வந்து போவார்.

Image result for vijay son

அதனை தொடர்ந்து 2009 ல் வெளி வந்த வெட்டைக்காரன் பட பாடலிலும் வந்து போவார். அதன் பின் அடுத்தடுத்த படங்களில் எதிர்ப்பார்க்கலாம் என்ற போது அடுத்த படங்களில் அவரது மகன் வருகை தரவில்லை. பின் 2016 அட்லீ இயக்கிய தெறி படத்தில் விஜயின் மகள் இறுதி காட்சிக்கு வந்து செல்வார்.

இப்படி இருந்த நிலையில் கடந்த வாரம் விஜயின் மகன் சஞ்சய் அவர் இயக்கி நடித்த ‘ஜங்ஷன்’ குறும்படத்தை வெளியிட்டார். அது இணையத்தில் வைரலாகியது. இது அவரின் படிப்பிற்காக எடுக்கப்பட்டதோ என யோசிக்கும் போதே மற்றொரு வீடியோவும் அவர் வெளியிட்டார். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் பங்காற்றியதில் இணையத்தில் பகிர்ந்தார்.

அரிமா நம்பி, இரு முகன், நோட்டா படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கரை பேட்டி எடுத்துள்ளார். இப்படி தொடர்ந்து தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதில் நடிகர் விஜயின் மறைமுக ஆதரவு இருக்குமோ என சினிமா வட்டாரம் பேசி வருகிறது.