ராமநாதபுரத்தில் கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

416

ராமநாதபுரத்தில் ஆடை விற்பனையாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

கமுதியை அடுத்த ராமசாமிப் பட்டியைச் சேர்ந்த ஜெயராம் தனது வீட்டில் துணிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலையில் ஜெயராமன் வீட்டுக்கு வந்த சிலர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த கமுதி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிக் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டின் கதவையோ பூட்டையோ உடைக்காமல் கொலையாளிகள் வீட்டுக்குள் வந்திருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் ஜெயராமனின் மனைவி பொன்மணியிடம் விசாரித்தனர்.

விசாரணையில் பொன்மணி கள்ளக்காதலன் அசோக்குமாருடன் சேர்ந்து கூலிப்படையினரை வைத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்துப் பொன்மணியையும், அவரது கள்ளக்காதலன் அசோக்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of