சட்டவிரோத விற்பனை – 25 கொக்குகள், 10 கிளிகளை மீட்ட வனத்துறை

164

புதுச்சேரியில் ஏரி மற்றும் வனப்பகுதிகளில் உள்ள பல்வேறு பறவைகளை சிலர் வேட்டையாடி விற்பனை செய்து வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஒதியம்பட்டு வில்லியனூர் பகுதிகளில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அப்பகுதியில் சிலர் சட்டவிரோதமாக கிளி மற்றும் கொக்குகளை பிடித்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகளை கண்ட அந்த மர்மநபர்கள், தப்பியோடிய நிலையில் விற்பனைக்காக வைக்கபட்டிருந்த 25 கொக்குகள், 10 கிளிகளை மீட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வனத்துறை அதிகாரி தியாகராஜன், பறவைகளை வேட்டையாடுவதும், விற்பனை செய்வதும் அதனை வாங்குவதும் சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வோர் மற்றும் அதனை வாங்குவோர் கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of