69 பேரை பலிவாங்கிய கள்ளச்சாராயம்..! மேலும் பலரின் நிலை?

455

அசாம் மாநிலம் கோல்ஹாட் மாவட்டத்தில் சல்மாரியா தேயிலை தோட்டத்தில் வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து தொழிலாளர்கள் 8 பெண்கள் உட்பட 30 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

மேலும் 50-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கோல்ஹாட் அரசு மருத்துவமனை உள்பட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில், பலரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு அதிகாரிகளை இடைநீக்கம் செய்து முதல் மந்திரி சர்பானந்தா சோனாவால் உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இது குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் அறிக்கை தரவும் அவர் உத்தரவிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of