போலீஸ் வாகனத்தில்.., கள்ளக்காதல் ஜோடி செய்த விபரீதம்..?

964

ஈரோடு மாவட்டம், நம்பியூர் புளியம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவிதாமணிக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணமான நிலையில், இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால், சேர்ந்து வாழ விரும்பிய இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புளியம்பட்டியில் இருந்து சென்னைக்கு தப்பிவந்து, கோயம்பேடு அருகே வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, இவர்களது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட நம்பியூர் போலீசார், நெற்குன்றத்தில் வசித்து வந்த ஜெயக்குமார் மற்றும் கவிதாமணியை பிடித்து, தங்களது வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது, ஊருக்கு சென்றால் தங்களை பிரித்துவிடுவார்கள் என அஞ்சிய கள்ளக்காதல் ஜோடி மறைத்து வைத்திருந்த விஷத்தை அருந்தியதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட போலீசார் இருவரையும் உடனடியாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement