கன்டெய்னரில் பெட்டி பெட்டியாக சிக்கிய நகைகள் ?

228

மேலூர் சிட்டம்பட்டி சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. பறக்கும் படையினர் அந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அப்போது லாரியில் பெட்டி பெட்டியாக கவரிங் நகைகள் இருந்தன. ஆனால், பறக்கும் படையினரால் அது கவரிங் நகைகள் என்று உடனடியாக கண்டறிய முடியவில்லை. தங்கமாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழும்பியது. அதற்குள் பெட்டி பெட்டியாக தங்க நகைகள் பறிமுதல் என்ற செய்தி அப்பகுதியில் வேகமாக பரவியது.

இதற்கிடையில் பற்கும் படையினர் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். பெட்டி பெட்டியாக தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்தி பரவியதால், கலெக்டர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, லாரியில் இருந்த பொருட்களை நகை மதீப்பிட்டாளர்களை வதை்து ஆய்வு செய்தார்.

அப்போது பறிமுதல் செய்யப்பட்டவை கவரிங் நகைகளே!!! என்பது தெரிய வந்தது. மேலும், கடையின் பழைய பொருட்களும் இருந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது