இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

3038

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இன்று நடைபெறும் இமானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இமானுவேல் சேகரனின் 61வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டு பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

பல்வேறு அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளதால், 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரமக்குடி முழுவதும் 75 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ட்ரோன் மேராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.