சென்னை சென்ட்ரல் – செயின்ட் தாமஸ் மவுன்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

602

சென்னை சென்ட்ரல் – செயின்ட் தாமஸ் மவுன்ட் இடையே மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னை சென்ட்ரலில் இருந்து செயின்ட் தாமஸ் மவுன்ட் நோக்கி சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயிலானது, பயணிகளை இறக்கி விடுவதற்காக எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நின்றுள்ளது.

பணிகள் இறங்கிய பிறகு இயந்திர கோளாறு காரணமாக ரயில் இயங்கவில்லை. இதனால் அந்த வழிதடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ரயில் சேவை தொடங்கியது. இதனால் பயணிகள் கடும் சரமத்திற்கு ஆளாகினர்.

இது போன்ற பிரச்சனை 3 வது முறையாக ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கீழ்பாக்கம், DMS, போன்ற பகுதிகளில் இது போன்ற இயந்திர கோளாறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement