அனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை | Ban for Plastic Import

215

இந்தியாவில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்கள் மூலம், கடந்த ஆண்டு வெளிநாடுகளில் இருந்து சுமார் 1,21,000 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு அறிக்கையை கூறியுள்ளது.

உள்நாட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்வதை விட இறக்குமதி செய்யும் செலவு குறைவாக இருப்பதால் பல நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் அனைத்து வகையான பிளாஸ்டிக் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் உள்ளூரில் பழைய பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்யும் நிலை ஏற்படும் எனவும் இதனால் நாடு முழுவதும் 40 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.