குட்கா ஊழல் தொடர்பாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக கைது.

173

குட்கா ஊழல் தொடர்பாக குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.

சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் விடிய விடிய நடைபெற்ற சோதனையின் முடிவில், சிபிஐ அதிகாரிகள் 2 பைகளில் முக்கிய ஆவணங்களை அள்ளிச் சென்றதாகதகவல் வெளியாகி உள்ளது.

குட்கா ஊழலில் அதிரடி சோதனையில் இறங்கி உள்ள சிபிஐ அதிகாரிகள் கைது நடவடிக்கைகளிலும் தீவிரம் காட்டி உள்ளனர். குட்கா ஊழல் தொடர்பாக, இடைத்தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார், ஆகிய இரண்டு பேரை இன்று காலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மாதவராவிடம் இருந்து லஞ்சப் பணத்தை வாங்கி அதிகாரிகளுக்கு கொடுத்ததாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, குட்கா குடோன் உரிமையாளர் மாதவராவ், மாதவராவின் கூட்டாளி உமா சங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் வரித்துறை கண்காணிப்பாளர் பாண்டியன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குட்கா ஊழல் தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், கைது படலத்தை தொடர்வார்கள் என்பதால் மேலும் பல முக்கிய புள்ளிகளும் கைதாவார்கள் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here