இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல்; முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை

691

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனை; முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை – தமிழக அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனை தொடங்கிய நிலையில், முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள இறக்குமதி மணல் விற்பனைக்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு மணல் இணையசேவை மூலம் இதற்கான முன்பதிவைச் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும், அரசு அறிவித்திருந்த படி, தமிழ்நாடு மணல் இணைய சேவை தளம் மற்றும் கைபேசி செயலி மூலம் இறக்குமதி மணல் தேவைப்படுவோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் பதிவு செய்ததால் சம்பந்தப்பட்ட இணையதளம் நீண்ட நேரம் முடங்கியது.

ஒரு யூனிட் மணலின் விலை 9 ஆயிரத்து 990க்கு விற்பனை செய்யப்படும் என்றும், 2 யூனிட் மணல்19,980 ரூபாய்க்கும், 3 யூனிட் மணல் 29,970 ரூபாய்க்கும், 4 யூனிட் மணல் 39,960 ரூபாய்க்கும், 5 யூனிட் மணல் 49,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

Advertisement