திண்டுக்கல் விவசாயிகளுக்காக 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி

172

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக கொச்சியிலிருந்து 688 மெட்ரிக் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், விவசாயிகள் உழவு பணிகளை தொடங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பில் வைக்கும் முயற்சியில் வேளாண்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொச்சியிலிருந்து 688 மெட்ரிக் டன் பாக்டம்பாஸ் அடி உரம் ரயில் மூலம் திண்டுக்கல் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கிருந்த தனியார் மற்றும் அரசு தொடக்க கூட்டுறவு வேளாண்மை சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of