இந்தியாவிற்குள் நுழைய இருக்கும் தீவிரவாதிகள்..? இம்ரான்கான் போட்ட டுவீட்..!

549

நீண்ட வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், பாகிஸ்தான் கடுமையாக எதிர்த்தது.

இதனால் ஐநா சபை வரை முறையிட்டு, கடைசியில் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு-காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் அவரது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் போட்டுள்ளார்.

அதில்,

“ஆப்கானிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவின் தெற்கு பிராந்தியங்களுக்குள் நுழைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் கூறுவதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.

இந்த செய்திகள் இந்தியாவின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை திட்டத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரம்.”

இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of