மீண்டும் புராணக்கதையில் நடிக்கிறார் சூர்யா!!!

2754

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் ‘வெயில்’, ‘ அங்காடித் தெரு’ ‘காவியத் தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் வசந்த பாலனிடன் கதை கேட்டிருப்பதாகவும், அது புராணம் சம்பந்தப்பட்ட கதை என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “ இயக்குநர் வசந்தபாலன் சூர்யாவைச் சந்தித்து கதை கூறியிருக்கிறார். புராணம் சம்பந்தப்பட்ட அந்த கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போக, அதனை வரும் காலத்தில் செய்யலாம் என சூர்யா கூறியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிராஜ் படத்தில் நடித்து முடித்த பின் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார். அதன் பின் இந்த படம் தொடங்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.

Advertisement