“ஆள மாத்தி சொல்லி அவஸ்தை பட்ட” பிரதமர் இம்ரான்

394

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார். ட்விட்டரில் அவரை 9.81 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர். இதில் இம்ரான் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று வாழ்க்கையை ஊக்குவிக்கும் சில வரிகளை அவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுதான் தற்போது நெட்டிசன்களால் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு வருகிறது.

இந்த பதிவில், ‘யாரேனும் ஞானத்தை புரிந்துக் கொள்ள மற்றும் அதனை கண்டறிய வேண்டும் என்றாலும், மன நிறைவுடன் வாழ வேண்டும் என்றாலும் கீழே உள்ள கிப்ரானின் வார்த்தைகள் வழி வகுக்கும்’ என குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை இணைத்து பதிவிட்டிருந்தார்.

mistake-tweet

இந்த பதிவில் சில எழுத்துப்பிழைகள் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி அந்த வார்த்தைகள் கவிஞர் கலீல் கிப்ரானுடையது அல்ல. அவை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் ஆகும்.

ஒரு பிரதமர், தான் வெளியிடும் பதிவினை நன்கு ஆராயாமல் இவ்வாறு செய்துள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of