திக்… திக்.. நிமிடங்கள்.. – காரின் முன்பகுதியில் தொங்கியபடி சென்ற நபர் -கார் டிரைவர் கைது

184

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற காரை பிடிக்க முயன்ற ஒருவரை முன்பக்கமாக தொங்கியபடி 2 கி.மீ தூரம் ஓட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

car

காசியாபாத்தில் கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில்  ஒருவர் அந்த காரை நிறுத்த முயன்றார்.அப்போது காரை நிறுத்த முயன்றவரை காரின் முன்பக்கம் நின்று கொண்டிருந்தபொழுது காரை எடுக்க முற்பட்டார்.

அப்போது அந்த காரில் அவர் தொங்கியபடி இருக்க சுமார் 2 கி.மீ தூரம் கார் வேகமாக சென்றது. இதனையடுத்து அவர் பயமில்லாமல் இருக்கவே காரை வேறு வழியின்றி நிறுத்தினார், இதனையடுத்து அந்த ஓட்டுனரை காவல்துறையிடம் பிடித்து கொடுத்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.