ஒரே நாளில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது – மு.க.ஸ்டாலின்

460

நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையும்,அதிகாரமும் ஒரேநாளில் பறிக்கப்பட்டுள்ளது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புப்பணிக்காக, எம்.பி.-க்களின் தொகுதிமேம்பாட்டு நிதியை நிறுத்தி வைத்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், தமிழகத்திற்கு மத்திய அரசு மிகக்குறைவான நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு 966 கோடிரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு, தமிழகத்திற்கு 560 கோடிரூபாய் மட்டும்   நிதி ஒதுக்கீடு செய்திருப்பது கொரோனா அரசியல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிமேம்பாட்டு நிதியை, இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அந்த நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் நடவடிக்கையானது  எம்.பி-க்களின் அதிகாரத்தையும், உரிமையையும் பறிக்கும் செயல் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of