சென்னையில் ஒரே இரவில் 90 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது

570

சென்னை, மண்ணடியில் கடந்த சில நாட்களாக தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பாஷா என்பவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவின் பூட்டை உடைத்து, 35 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பாஷா மண்ணடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து வந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், சூளைமேடு பகுதியில் மாலா என்பவரின் வீட்டிலிருந்து 35 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஒரே இரவில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement