சீனாவில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து 11 பேர் பலி

224

சீனாவின் ஹேபேய் மாகாணத்தில் உள்ள ஹெங்சூய் நகரில் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இங்கு நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தொழிலாளர்கள் சிலர் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து லிப்டில் கீழே இறங்கி கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் லிப்டின் கேபிள் திடீரென அறுந்தது.

இதனால் லிப்ட் அதிவேகத்தில் தரையில் விழுந்தது. இந்த கோர விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் இருவர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of