திரையுல தளபதி விஜய் அண்ணா, தல அஜித் சார்: உதயநிதி ஸ்டாலின்

1658

ரசிகர்களால் இளைய தளபதி என அழைக்கப்படும் விஜய், மெர்சல் படத்தில் தளபதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் மெர்சல் படத்தின் மூலம் தளபதி விஜய் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை திமுக தொண்டர்கள், பொதுமக்கள் பலரும் தளபதி ஸ்டாலின் என அழைப்பது அனைவரும் அறிந்ததே. தற்போது விஜய்யை தளபதி என்று அழைத்து வருவதால், இணையதளத்தில் ஒருவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினிடம் ‘விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று கேள்வி கேட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் ! என டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

Advertisement